மதுரை: எக்ஸ் தளத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்திய தொல்லியல் துறை கடந்த 5 ஆண்டுகளில் அகழாய்வுப் பணிகளுக்கான மொத்த நிதியில் 25 சதவீதத்தை (ரூ.8.53 கோடி) குஜராத்தில் மட்டும் செலவிட்டுள்ளது. அதிலும் 94 சதவீதத்தை பிரதமர் மோடி பிறந்த ஊரான வாட் நகரில் மட்டும் செலவிட்டுள்ளது. இதே காலத்தில் தமிழ்நாட்டிற்கு செலவழிக்கப்பட்டுள்ளது வெறும் 9.8 சதவீதம் மட்டுமே. நேற்று வரை ‘வாட் நகர் நாயகனாக’ இருந்து விட்டு இன்று ‘கங்கை கொண்டானாக’ மாறிவிட்டதாக நம்ப சொல்கிறார்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
The post தொல்லியல் அகழாய்வு பணிக்காக நிதி; குஜராத்திற்கு 25% தமிழகத்துக்கு 9.8%: மார்க்சிஸ்ட் எம்பி கண்டனம் appeared first on Dinakaran.
