முதலமைச்சர் கோப்பை-2025 விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு: ஆக.16ம் தேதி வரை நடைபெறும்; ரூ.37 கோடி பரிசு தொகை

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2025ம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகிற 22.8.2025 முதல் 12.9.2025 வரை நடத்தப்பட உள்ளன. இந்த விளையாட்டு போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 12 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரையிலான பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டு போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். ரூ.37 கோடி மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025ம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளம் மூலமாக பதிவுகள் நடந்து வருகின்றன. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in / https://sdat.tn.gov.in வாயிலாக தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள 17.7.2025 முதல் முன்பதிவு நடந்து வருகிறது. முன்பதிவு செய்ய கடைசி நாள் 16.8.2025 மாலை 6 மணி. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முதலமைச்சர் கோப்பை-2025 விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு: ஆக.16ம் தேதி வரை நடைபெறும்; ரூ.37 கோடி பரிசு தொகை appeared first on Dinakaran.

Related Stories: