பவானிசாகர் அருகே கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட  புதுப்பீர்கடவு  வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை அப்பகுதியில் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, நாய், உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது. சிறுத்தையை  பிடிக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு கூண்டு வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த சிறுத்தை அந்த கூண்டில் சிக்கியது. இதையடுத்து சிறுத்தையை வாகனத்தில் ஏற்றி காராச்சிக்கொரையில் உள்ள வன கால்நடை மையத்திற்கு கொண்டு சென்றனர்.

 அங்கு வனத்துறை கால்நடை மருத்துவர் பரிசோதித்து நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா பகுதியில் உள்ள மங்களப்பட்டி வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கூண்டின் கதவை திறந்ததும் சிறுத்தை தாவி குதித்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. சிறுத்தை சிக்கியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: