14 ஆண்டுகளுக்கு பிறகு காடுவெட்டி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா

தா.பேட்டை: திருச்சி காட்டுப்புத்தூரை அடுத்த காடுவெட்டி மகா மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு தேர் தலையலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நேற்றுமாலை தேர் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் தேரை தங்களது தோளிலும், தலையிலும் தூக்கிக்கொண்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காடுவெட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த விழா 14 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: