வெம்பக்கோட்டை அகழாய்வில் யானை தந்தத்தில் செய்த தொங்கட்டான் கண்டெடுப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவாசி அருகே வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுகாட்டில் அகழாய்வு பணி கடந்த மார் 16 முதல் நடந்து வருகிறது. இங்கு தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் தோண்டப்பட்ட 7 குழிகளில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள், பொம்மைகள், அகல் விளக்கு, புகைப்பிடிப்பான், சூதுபவளம், தக்களி, பானை, விலங்குகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் யானை தந்தத்தாலான தொங்கட்டான் கிடைத்துள்ளது. இதுகுறித்து வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘‘வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாய்வு பணியில் தோண்ட தோண்ட பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தபடி உள்ளது. 7வது குழியில் யானை தந்தத்தாலான தொங்கட்டான் கிடைத்துள்ளது’’ என்றார்.

Related Stories: