ரயிலில் இருந்து விழுந்து மாணவன் பரிதாப பலி

ஆவடி: சென்னை ரெட்டேரி நியூ லட்சுமி நகரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(19), ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் கல்லூரி படிப்பு முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அண்ணனூர் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்தபோது, திடீரென ரயில் நிலையம் அருகிலேயே ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதனைபார்த்த நண்பர்கள் மின்சார ரயிலை நிறுத்தினர். பின்னர், அவர்கள் விக்னேஸ்வரனை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், விக்னேஸ்வரன் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர்.

Related Stories:

>