திடீரென்று உடல் எடை கூடிய தனுஷ்

கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்றவர், தனுஷ். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு தெலுங்கில் ‘குபேரா’ படமும், இந்தியில் ‘தேரே இஷ்க் மே’ படமும் வெளியானது. தமிழில் ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்தார். தற்போது ‘போர் தொழில்’ இயக்குனர் விக்னேஷ் ராஜா டைரக்‌ஷனில் தனது 54வது படத்தில் நடித்திருக்கிறார். தற்போது ‘அமரன்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்‌ஷனில் 55வது படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது. இந்நிலையில், தனுஷின் லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது. அதில் தனுஷ் உடல் எடை கூடியிருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள், ‘தனுஷா இது’ என்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளனர். இன்னும் சிலர், ‘புதிய படத்துக்கான தனுஷின் கெட்டப் இது’ என்று பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories: