தவிர, இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர்கள் என்ற கேட்டகிரியில் இருக்கும் சில பிரபலமானவர்கள், தங்களுக்கான வரவேற்பை பொறுத்து விளம்பரங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்குகின்றனர்.
இவ்விஷயத்தில் முதலிடத்தில் இருப்பவர், முன்னாள் உலக அழகியும், பான்வேர்ல்ட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டில் தனது கணவர் பாடகர் நிக் ஜோனஸ், மகள் மால்டியுடன் செட்டிலாகிவிட்ட அவரை இன்ஸ்டாகிராமில் 92 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். அதில் அவர் விளம்பரம் வெளியிட 2 முதல் 3 கோடி ரூபாய் வாங்குகிறார்.
அடுத்து தீபிகா படுகோனை 80 மில்லியனுக்கு மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். ஒரு விளம்பரத்துக்கு 1 முதல் 2 கோடி ரூபாய் பெறுகிறார். அலியா பட் ஒன்றரை கோடி ரூபாய் வாங்குகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் 85 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். கேத்ரினா கைஃப் 1 கோடி ரூபாய் பெறுகிறார். ஷாருக்கானை 40 மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கின்றனர். ஒரு விளம்பரத்துக்கு 1 கோடி ரூபாய் வாங்குகிறார். அக்ஷய் குமார், அனுஷ்கா சர்மா ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் வரை விளம்பரம் மூலம் சம்பாதிக்கின்றனர்.