தமிழிலும் வெளியாகும் இத்திக்கர கொம்பன்

சென்னை: ‘இத்திக்கர கொம்பன்’ என்கிற மலையாளப்படம் உருவாகி வருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது. இப்படத்தில் சாது என்கிற ஒரு யானை பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளது.அந்த யானைக்குக் கதையில் உள்ள இடமும் காட்சிகளும் குழந்தைகள் மனதைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை  லட்சுமி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜன் பாப்பன், லா வடகரா தயாரித்துள்ளனர்.

மலையாளத்தில் அறிமுகமான நடிகர்களான டினி டோம், டோனி, கரீனா குறுப்பு, கேசு , சுமேஷ், ஜா போன்ற நடிப்புக் கலைஞர்கள் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் அறிமுகமாகிறார். அவர் தூத்துக்குடி செல்வம் என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டும் தோற்றத்தில் வருகிறார். அசர வைக்கும் நடிப்பிலும் மிரள வைக்கும் சண்டைக் காட்சிகளிலும் முத்திரை பதித்திருக்கிறார் என்கிறது படக்குழு. படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் கே. ராஜு.

 

Related Stories: