சென்னை: கேத்தரின் தெரசா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பனி’ படம் மே மாதம் உலகெங்கும் வெளியாகிறது. ஓஎம்ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் மீனாட்சி அனிபிண்டி தயாரிக்கும் இந்த படத்தை வி.என். ஆதித்யா இயக்குகிறார். கேத்தரின் தெரசா படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரோடு மகேஷ் ஸ்ரீராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் பாம்பு ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வருகிறது.
உயர்தர அனிமேஷன் காட்சிகள் இந்தப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது, ஆனால் மனிதன் தனக்கு மட்டுமே இந்த உலகம் என்கிற எண்ணத்தில் மற்ற உயிரினங்களை பன்னெடுங்காலமாக மெல்ல மெல்ல அழித்து மனித உயிர்களே இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது என்கிற கருத்தை கமர்ஷியலா இந்த படம் சொல்கிறது. பான் இந்தியா படமாக மே மாதம் ரிலீசாகிறது. புகழ்பெற்ற இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் ஐதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘பனி’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்.