சென்னை: பிரகதி குருபிரசாத், ‘வணக்கம் சென்னை’, ‘காதலும் கடந்து போகும்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘ராட்சசன்’, ‘கண்ணே கலைமானே’ உள்ளிட்ட பல படங்களில் பல பாடல்களை பாடியிருக்கிறார். ‘தாரை தப்பட்டை’ படத்தில் சிறிய ரோலில் நடித்த பிரகதி, ‘பரதேசி’ படத்திலும் நடித்தார். இந்நிலையில் பிரகதி குருபிரசாத், நடிகர் அஸ்வின் குமாருடன் சேர்ந்து ஒரு ஆல்பம் வீடியோவில் நடித்து பாடியுள்ளார். ‘அடடா’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த ஆல்பம் இப்போது யூடியூப்பில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தற்போது, அஸ்வினும், பிரகதியும் இணைந்து பேட்டிகளை தந்து, இணையத்தையே கலக்கி கொண்டிருக்கிறார்கள். பிரகதி பேசும்போது, “நான் கல்யாணம் பண்ணிக்க போற பையன் லாயலா இருக்கணும், ரொம்ப கேரிங்கா இருக்கணும், ரெஸ்பக்ட்ஃபுல்லா இருக்கணும், பாரிஸ் ஈபிள் டவரில் கல்யாணம் நடக்கணும்” என்று ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல, அதற்கெல்லாம் அஸ்வின் “அடடா” என்று வியந்து சொல்கிறார்.. ஒவ்வொரு கேள்விக்கும், ஒவ்வொரு மாடுலேஷனில் பிரகதி சொன்ன அடடா பதிலை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.