இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட விஷயத்தில் என் பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷின் குடும்பப் பிரச்சினைகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெளிப்படையாகச் சொன்னால், நான் ஒருபோதும் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்ததில்லை. குறிப்பாக ஒரு திருமணமான ஆணுடன் நிச்சயம் டேட்டிங் செய்ததில்லை. ஆதாரமற்ற வதந்திகளுக்கு கவனம் கொடுக்க தேவையில்லை என நான் இதுவரை எந்த பதிலும் தராமல் அமைதியாக இருந்தேன். இருப்பினும், அந்த வதந்திகள் எல்லைகளை கடந்து சென்றிருக்கிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன்’’ என தெரிவித்துள்ளார்.