டேனியல் பாலாஜியின் கடைசி படம் ஆர் பி எம்: கல்பனா ராகவேந்தர் உருக்கம்

சென்னை: வில்லன் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் முதல் படமும், அவர் நடித்த கடைசி படமுமான ‘ஆர்பிஎம்’ படத்தின் டிரைலரை, கடந்த மார்ச் 29ம் தேதி டேனியல் பாலாஜியின் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது தாயார் ராஜலட்சுமி வெளியிட்டார். பிரசாத் பிர பாகர் இயக்கத்தில் கோவை சரளா, ஒய்.ஜி.மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி, சுனில் சுகதா, ஈஸ்வர் கார்த்திக், தயா பிரசாத் நடித்துள்ளனர். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்ய, ஜெ.செபாஸ்டியன் ரோஸாரியோ இசை அமைத்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்ய, ஸ்டன்னர் சாம் சண்டை பயிற்சி அளித்துள்ளார். கிரைம் சஸ்பென்ஸ் திரில்லரான இதை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்‌ஷனுக்காக பாடகி கல்பனா ராகவேந்தர் தயாரித்துள்ளார். பிரசாத் பிரபாகர் புரொடக்‌ஷன் சார்பில் பிரசாத் பிரபாகர் இணைந்து தயாரித்துள்ளார். சோனி பிக்சர்ஸ் இண்டர்நேஷ னல் படத்தை வெளியிடுகிறது.

கல்பனா ராகவேந்தர் மிக உருக்கமாக பேசினார். அவர் கூறுகையில், ‘நான் டேனியல் பாலாஜியை சந்தித்தபோது, ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடிய ‘கண்ணான பூ மகனே…’ பாடலை பாடும்படி கேட்டார். பயிற்சி இல்லாததால் பாடவில்லை. பிறகு எஸ்.ஜானகி பாடிய ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடலை வீடியோகாலில் பாடினேன். ‘ஆர்பிஎம்’ படத்தில் நடிக்கும்போது, சக நடிகர்கள் ஈஸ்வர் கார்த்திக், சாருகேஷ், பாபு, முத்து ஆகியோரிடம் பேசிய டேனியல் பாலாஜி, ‘இதுதான் எனது கடைசி படம். பிறகு நான் ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபடுவேன்’ என்று சொன்னார். இன்று அவர் நம்மிடையே இல்லை. இப்படத்தில் நான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்துஇருக்கிறேன்’ என்றார்.

Related Stories: