ரிலீசுக்கு முன்பு இணையத்தில் வெளியான சிக்கந்தர்: திரையுலகினர் பலத்த அதிர்ச்சி

சென்னை: சமீபகாலமாக மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்களின் படங்கள், திரைக்கு வந்த அன்றோ அல்லது தியேட்டருக்கு வருவதற்கு முன்போ, எச்டி பிரிண்ட் என்கிற திருட்டுத்தனமான வீடியோ அல்லது காட்சிகள் வெளியிடப்படுகின்றன.

இதுகுறித்து திரைத்துறையிலுள்ள பல்வேறு தரப்பினர் புகார் கூறியும் திருட்டுத்தனம் ஒழியவில்லை. அது நாளுக்கு நாள் பெருகி வருவது கவலைப்பட வைத்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்கள், திரைக்கு வந்த சில நாட்களிலேயே பைரசி இணையதங்களில் வெளியாகிறது. இதை தடுக்க முடியாமல் தவிக்கும் திரையுலகினர், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் அடைகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த ‘சிக்கந்தர்’ படம், ரிலீசாவதற்கு ஒருநாள் முன்பே இணையதளத்தில் எச்டி பிரிண்ட் ஆக வெளியே வந்தது. கடினமான சூழ்நிலையில் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தொடர்ந்து திருட்டுத்தனம் நடந்தால், அனைத்து தயாரிப்பாளர்களும் பலத்த நஷ்டம் அடைந்து, தொழிலையே விட்டுவிட்டு செல்லும் அபாயம் ஏற்படும். எனவே, இந்த விவாகரத்தில் நடவடிக்கை எடுத்து, திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் இணையதளங்களை உடனே முடக்கி, திரைத்துறையை காப்பாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: