பிரபாஸ் திருமணம் செய்யாததற்கு என்ன காரணம்? அம்மா உருக்கமான தகவல்

ஐதராபாத்: 46 வயதாகியும் பிரபாஸ் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அவரது அம்மா உருக்கமாக தெரிவித்துள்ளார். சலார் 2, ராஜா சாப், ஸ்பிரிட், கண்ணப்பா ஆகிய பான் இந்தியா படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் பிரபாஸ். இந்த ஆண்டில் 46 வயதை எட்டவிருக்கும் நிலையில் கூட திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்கிறார். இந்நிலையில் பிரபாஸின் அம்மா அளித்த பேட்டியொன்றில் மகன் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். ‘‘எனது மகன் பிரபாஸுக்கு ரவி என்ற நண்பர் இருக்கிறார். ரவியின் திருமண வாழ்க்கை நன்றாக அமையவில்லை.

அந்தத் திருமண வாழ்க்கை ரொம்பவே போராட்டம் நிறைந்ததாக அமைந்தது. அதை அவரும் சகித்துக்கொண்டார். ஆனாலும் கணவன், மனைவி இடையே ஒத்துவரவில்லை. தொடர்ந்து சண்டை, சச்சரவுகள் அதிகரித்தது. அந்த திருமண வாழ்க்கை கடைசியில் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டது. எனவே திருமண வாழ்க்கை என்றாலே இப்படித்தான் விரைவில் பாதியில் உடையும் என்ற எண்ணம் பிரபாஸ் மனதில் ஆழமாக ஊன்றிவிட்டதால் தான் அவர் திருமணத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை’’ என்று அவரது அம்மா கூறியுள்ளார். இந்நிலையில் பிரபாசின் நண்பர் ரவி யார் என ரசிகர்கள் இணையத்தில் தேட ஆரம்பித்துள்ளனர்.

Related Stories: