அனிருத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அட்வைஸ்: கிளாசிக்கல் இசையில் பாடல்களை உருவாக்குங்கள்

சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், விநய் ராய் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படம், வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் அனிருத், மிஷ்கின் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது இப்படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது:

தற்போது அனிருத் நன்றாக இசை அமைக்கிறார். எவ்வளவு பெரிய படத்துக்கும் ஹிட் கொடுக்கிறார். 10,000 இசை அமைப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு நடுவே நிலைத்து நிற்பது என்றால், திறமை இல்லாமல் நடக்காது. அதையெல்லாம் செய்துவிட்டு, ‘தலைவன் தலைவன்தான், தொண்டன் தொண்டன்தான்’ என்று சொல்லும் அவரது பணிவு ஆச்சரியப்பட வைக்கிறது. உங்கள் வெற்றிக்கு பாராட்டுகள். உங்களுக்கு ஒரு வேண்டுகோள் அனிருத். கிளாசிக்கல் இசையைப் படித்துவிட்டு, அதில் நீங்கள் நிறைய பாடல்களை உருவாக்க வேண்டும். அதை நீங்கள் செய்தால், இளம் தலைமுறையினருக்கு அந்த இசை போய் சேரும்.

Related Stories: