சினிமாவில் இருந்து விலக நித்யா மேனன் விருப்பம்

சென்னை: சினிமாவை விட்டு விலக விரும்புகிறேன் என்றார் நடிகை நித்யா மேனன். சிறு வயதில் இருந்தே டான்ஸ் ஆடு, பாட்டுப் பாடு, கேமரா முன்பாக வந்து நடி என எனது அம்மா என்னை வற்புறுத்துவார். ஆனால், சினிமா என்றாலே எனக்கு சுத்தமாக பிடிக்காது. சமீபத்தில், போதும் சினிமாவை விட்டு வேறு ஏதாவது பண்றேன். எனக்கு இது பிடிக்கவில்லை என்றே பெற்றோர்களிடம் சொல்ல, அவர்களும் உனக்கு எது பிடிக்கிறதோ அதை செய் என சொல்லிவிட்டனர். இந்நிலையில்தான் எனக்கு தேசிய விருது கிடைத்தது.

அந்த விருது கிடைத்த நிலையில் தான் நம்மை சினிமா விடாது என்றும் கடவுள் நமக்குத் தரும் லஞ்சம் இது என நினைத்துக் கொண்டேன். சிறு வயதில் இருந்தே கேமரா முன்னாடி நிற்கவே பிடிக்காது. சினிமா நடிகையாக மாறியதில் இருந்து தனிப்பட்ட சுதந்திரத்தை மிஸ் செய்கிறேன். இயல்பான வாழ்க்கைக்கான ஃபீலிங் எனக்கு கிடைக்காதபோது, அது என்னை டிஸ்டர்ப் செய்துகொண்டே இருக்கும். வைல்டு லைஃப் போட்டோகிராஃபர் போல வாழ ஆசைப்பட்டேன். புகைப்படம் எடுப்பதில் எனக்கு தனி ஆர்வம் இருக்கிறது. ஆனால் சினிமாவை விட்டு விலக முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன். இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.

Related Stories: