வருடம் தோறும் மலையாள படத்தில் நடிப்பேன்; திரிஷா

சென்னை: ராகம் மூவிஸ் சார்பில் ராஜூ மல்லையாத், கான்ஃபிடன்ட் குரூப் சார்பில் சி.ஜே.ராய் இணைந்து தயாரித்துள்ள ‘ஐடென்டிட்டி’ என்ற படம், மலையாளம் மற்றும் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. டொவினோ தாமஸ், திரிஷா, விநய் ராய் நடித்துள்ளனர். இப்படம் சம்பந்தமாக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அகில், விநய் ராய் கலந்துகொண்டனர். அப்போது டொவினோ தாமஸ் பேசுகையில், ‘இப்படம் குறித்து 2020ல் இருந்து நானும், அகிலும் பேசி வந்தோம். அப்போதே ஷாட் டிவிஷனுடன் தயாராக இருந்தார்.

கதைதான் சீரியஸ். ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப ஜாலியாக இருந்தது’ என்றார். பிறகு திரிஷா பேசுகையில், ‘எனக்கு மலையாளப் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படங்களின் மீது நிறைய மரியாதை இருக்கிறது. வருடத்துக்கு ஒரு மலையாளப் படத்திலாவது நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது இந்த வாய்ப்பு வந்தது. ‘ஐடென்டிட்டி’ படக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. மிகவும் புத்திசாலித்தனமான திரைக்கதை என்பதால், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டொவினோ தாமஸ் மலையாளத்தில் முன்னணி ஹீரோ. அவர் தேர்வு செய்யும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படம் ரிலீசான நாளிலிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இப்போது தமிழில் கிடைத்து வரும் வரவேற்பு அதிக மகிழ்ச்சி அளித்துள்ளது’ என்றார்.

 

Related Stories: