பேன்டசி ரொமான்டிக் கதை யோலோ

சென்னை: சமுத்திரக்கனியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சாம் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘யோலோ’. இதில் தேவ், தேவிகா, ஆகாஷ், படவா கோபி, நிக்கி, சுபாஷினி கண்ணன் நடித்துள்ளனர். எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி சாம் கூறும்போது, “இது முழுநீள ரொமான்டிக் படம். அதே சமயம், காமெடியும் இருக்கும். ரத்தம் தெறிக்கும் படங்களே அதிகம் வரும் சமயத்தில் ரசிகர்களுக்கு இந்த படம் மாறுதலாக இருக்கும். இரண்டு பேர் வாழ முடியாத ஒரு வாழ்க்கையை மற்றொரு இரண்டு பேர் வாழ்கிறார்கள். இதுதான் இதன் ஒன்லைன். அந்த 2 பேர் யார்? ஆவியா, அமானுஷ்ய சக்திகளா என்றெல்லாம் கேள்வி வருகிறது. அதையொட்டி படத்தில் ஃபேன்டசி விஷயமும் இருக்கிறது. அது இப்போதைக்கு சஸ்பென்ஸ். கோடை விடுமுறையில் படம் திரைக்கு வரும்’’ என்றார்.

Related Stories: