சென்னை, ஜன.1: பத்து வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு ‘துணிந்தவன்’ என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சுஜீஷ் தெக்ஷணா காசி – ஹரிநாராயணன் இயக்கியுள்ளார்கள். தக்ஷணா காசி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது . செல்வகுமார் ஒளிப்பதிவு.உன்னி நம்பியார் இசை. அச்சு விஜயன் படத்தொகுப்பு. இந்தப் படத்தில் இந்திரன், ஜாபர், ஜோனி ஆண்டனி, ஐ. என். விஜயன், சுதீஷ், டயானா ஹமீத், அபர்ணா சிவதாஸ், நடித்துள்ளனர். கதையின் பிரதான பாத்திரமான அந்த 10 வயது சிறுமியாகத் தயாரிப்பாளரின் மகள் காஷ்மீரா நடித்துள்ளார்.
படத்தின் கதை பற்றி இயக்குநர் சுஜீஷ் கூறும்போது, ‘அம்மா, அப்பா, 10 வயது சிறுமி என்று இருக்கும் அந்த பாசக் குடும்பத்தில் காலத்தின் கோலத்தால் ஒரு புயல் அடிக்கிறது. பல சிக்கலில் இருந்து சிறுமி மீண்டு வந்ததா இல்லையா என்பது ‘துணிந்தவன்’ படத்தின் கதை. இப்படத்தை சாகரம் பிலிம் கம்பெனி ஆட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மலையாளத்தில் ‘ஒறும்பேட்டவன்’ என்ற பெயரில் ஜனவரி 3ம் தேதி வெளியாகிறது. தமிழில் ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகும்’ என்றார்.