விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகாவுக்கு ஏப்ரலில் திருமணம்?

ஐதராபாத்: ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா திருமணம் ஏப்ரலில் நடைபெறும் என தகவல் பரவியுள்ளது. ‘கீதா கோவிந்தம்’ தெலுங்கு படத்தில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்டாவுக்கும் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பிறகு சில காரணங்களால் அவர்கள் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களிடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டது.

புஷ்பா 2 பட விழாவில் நீங்கள் காதலிக்கிறீர்களா என ராஷ்மிகாவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டபோது, அது எல்லோருக்கும் தெரிந்ததுதானே என அசால்டாக சொன்னார் ராஷ்மிகா. தற்போது ஒருவருடன் டேட்டிங்கில் இருக்கிறேன் என விஜய் தேவரகொண்டாவும் சூசகமாக தெரிவித்தார். இந்நிலையில் இருவரும் பொதுஇடங்களுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். மார்ச் இறுதியில் உகாதி பண்டிகை வருகிறது. அதையொட்டி ஏப்ரல் முதல் வாரத்தில் இவர்களின் திருமணம் நடைபெறும் என தகவல் பரவியுள்ளது. தற்போது இந்தியில் 3 படங்களில் ராஷ்மிகா நடிக்கிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க அவர் முடிவு செய்திருக்கிறார்.

Related Stories: