படத்தில் பணியாற்ற சம்பளம் வாங்கவில்லை: ராஜமவுலி மகேஷ் பாபுவுக்கு லாபத்தில் பங்கு

ஐதராபாத்: ‘ஆர்ஆர்ஆர்’. படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கும் பான் வேர்ல்ட் படத்தை ராஜமவுலி இயக்குகிறார். இப்படம் இந்தியாவில் தயாராகும் மிகப் பிரமாண்டமான படம் என்று கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள அடர்த்தியான காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் பணியாற்ற எஸ்.எஸ்.ராஜமவுலி, மகேஷ் பாபு ஆகியோர் சம்பளம் வாங்கவில்லை. அதற்கு பதிலாக, இருவரும் லாபத்தில் 40 சதவீதம் சம்பளம் என்ற முறையில் ஒப்பந்தமாகியுள்ளனர். உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக இருப்பதால், இதன்மூலமாக அவர்களுக்கு பல கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ராஜமவுலி அலுவலகத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.

Related Stories: