பணத்துக்காக படத்தை இயக்காத மோகன்லால்

மலையாள மெகா ஸ்டார் மோகன்லால் இயக்கி நடித்துள்ள படம், ‘பரோஸ்’. 3டியில் உருவாக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. இதுகுறித்து மோகன்லால் கூறுகையில், ‘நான் இயக்கிய ‘பரோஸ்’ படத்தை பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கவில்லை. 47 ஆண்டுகளாக மக்கள் எனக்கு அளித்த மரியாதைக்காக, நான் அவர்களுக்கு வழங்கிய பரிசுதான் ‘பரோஸ்’.

குழந்தைகளுடன் குடும்பமாக வந்து பார்க்க வேண்டிய இப்படம், நமக்குள் இருக்கும் குழந்தைப் பருவத்தை கண்டிப்பாக தூண்டும்’ என்றார். கடந்த கிறிஸ்துமஸ் அன்று திரைக்கு வந்த இப்படம் அனைத்து மொழியிலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கடந்த ஆண்டு மோகன்லால் நடித்திருந்த ‘மலைக்கோட்டை வாலிபன்’, இயக்கி நடித்த ‘பரோஸ்’ ஆகிய படங்கள் தோல்வி அடைந்துள்ளன.

Related Stories: