கடுமையான விமர்சனங்களை ஏத்துக்கணும்: ஷங்கர்

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ என்ற பான் இந்தியா படம், வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி ஷங்கர் அளித்த பேட்டி: மாற்றத்தை விரும்பும் நேர்மையான அரசு அதிகாரிக்கும், பவர்ஃபுல் அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் உச்சக்கட்ட போர்தான் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானியிடம் அழகும், இளமையும், திறமையும் இருக்கிறது. மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ராம் சரணுடன் போட்டி போட்டு நடனமாடியுள்ளார். அஞ்சலியின் கேரக்டரில் ஒரு சர்ப்ரைஸும், ட்விஸ்ட்டும் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் எஸ்.ஜே.சூர்யா அசத்தியுள்ளார். தனிப்பட்ட நபர் தாக்குதலை விமர்சனத்தில் கொண்டு வரக்கூடாது. மற்றபடி ஒரு படத்தை யார், எப்படி கடுமையாக விமர்சித்தாலும், அதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். விமர்சிப்பதை தடுக்க முடியாது. நல்ல கருத்தாக இருந்தால், அதை எடுத்து மாற்றிக்கொள்ளலாம். இல்லை என்றால், கடந்து செல்ல வேண்டியதுதான். ‘இந்தியன் 2’ பற்றிய விமர்சனங்களை நான் கண்டுகொள்ளவில்லை. அடுத்த வேலையில் கவனம் செலுத்துகிறேன்.

Related Stories: