10 வயது சிறுமி பாதித்த கதை படமானது

உண்மைச்சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘துணிந்தவன்’. இந்திரன், ஜாபர், ஜோனி ஆண்டனி, ஐ.என்.விஜயன், சுதீஷ், டயானா ஹமீத், அபர்ணா சிவதாஸ் நடித்துள்ளனர். 10 வயது சிறுமியாக தயாரிப்பாளரின் மகள் காஷ்மீரா நடித்துள்ளார். கோட்டயம் பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சுஜீஷ் தெக்ஷணா காசி, ஹரி நாராயணன் இயக்கியுள்ளனர். ெதக்ஷணா காசி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, உன்னி நம்பியார் இசை அமைத்துள்ளார். நாளுக்கு நாள் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த மன நோய்க்கான காரணம் புரியாத புதிராக இருக்கிறது. உண்மையில் 10 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. எஸ்எஃப்சி என்ற சாகரம் பிலிம் கம்பெனி ஆர்ட்ஸ் நாளை இப்படத்தை வெளியிடுகிறது.

Related Stories: