இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது பால்ய கால நண்பரும், பல வருட காதலருமான நவ்நீத் என்பவரை நேற்று முன்தினம் கோவாவிலுள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்துகொண்டார். இதில் இருவீட்டு உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். தனது திருமணம் குறித்து சாக்ஷி அகர்வால் கூறுகையில், ‘இந்த நன்னாளை ஒரு கனவு போல் உணர்கிறேன். எனது சிறந்த நண்பர் நவ்நீத்தை திருமணம் செய்துகொள்வது என் வாழ்நாளின் லட்சியமாக இருந்தது’ என்றார். நவ்நீத் கூறுகையில், ‘சாக்ஷி என் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். இன்றைய தினம் எங்களின் காதலின் தொடக்கத்தைக் குறிக்கிறது’ என்றார். திருமணத்துக்குப் பிறகும் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று ெதரிகிறது.