ஒரு பெண் திருமண உறவில் பாதிப்பட்டு, மன அழுத்தத்தில் இருக்கிறாள். அவளது வாழ்வில் வரும், இளைஞனால் அவளது வாழ்க்கை மாறுவது தான் இந்த குறும்படத்தின் கதை. பெண் சுதந்திரத்தின் அவசியத்தை பேசும் அழகான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, முன்னணி பிரபல நடிகர் தினேஷ் மற்றும் இயக்குநர் லெனின் பாரதி பாராட்டியுள்ளனர். மகாலட்சுமி மற்றும் விஜய் இக்குறும்படத்தில் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசையமைத்துள்ளார். சரத் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.