பாத்ரூம் பார்வதி என நடிகர்கள் கிண்டல் பண்றாங்க: பார்வதி திருவோத்து பகீர் புகார்

கொச்சி: நடிகர்கள் தன்னை பாத்ரூம் பார்வதி என கிண்டல் செய்வதாக நடிகை பார்வதி திருவோத்து பகீர் புகார் கூறியுள்ளார். தனுஷ் ஜோடியாக ‘மரியான்’, விக்ரமுடன் ‘தங்கலான்’, ‘பூ’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து. மலையாள நடிகையான இவர், சினிமாத்துறையில் உள்ள பெண்களுக்காக போராடும் இயக்கத்தில் இருக்கிறார். ஹேமா கமிட்டி அமைவதற்கு பிற நடிகைகளுடன் சேர்ந்து போராடியவர் பார்வதி. அதேபோல் பெண் கலைஞர்களுக்கு படப்பிடிப்பு தளங்களில் போதிய வசதிகள் செய்து தரக் கோரியும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்புக்கு செல்லும் இடங்களில் பெண் கலைஞர்களுக்காக பாத்ரூம் வசதிகள் செய்ய சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் பார்வதி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.

இது குறித்து பார்வதி கூறியது: படப்பிடிப்பு தளத்தில் பெண்களுக்கு பாத்ரூம் வசதிகள் கூட செய்து தருவதில்லை. பெரிய நடிகைகளுக்கு கேரவன் கிடைத்துவிடும். மற்றபடி துணை நடிகைகள், டெக்னீஷியன்கள் கஷ்டப்படும் நிலை இருக்கிறது. இதை படங்களின் தயாரிப்பாளர்களிடம் சொல்லிவிட்டேன். நான் உறுப்பினராக இருக்கும் நடிகர் சங்கத்திலும் பேசிவிட்டேன். ஆனால் யாரும் காது கொடுத்து கேட்பதில்லை. நான் இப்படி கோரிக்கைகள் வைப்பதால், நடிகர் சங்கத்தில் உள்ள நடிகர்கள் சிலர் என்னை பாத்ரூம் பார்வதி என கிண்டல் அடிக்கிறார்கள். இதை என்னுடன் பணியாற்றிய சில நடிகர்களே சொன்னபோது வருத்தமாக இருந்தது. இவ்வாறு பார்வதி கூறினார்.

Related Stories: