சென்னை: பிரான்சில் இந்திய திரைப்படங்களை வெளியிடும் பிரைடே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜெயந்தன் தயாரித்துள்ள படம், ‘டிராக்டர்’. இதில் பிரபாகரன் ஜெயராமன், ஸ்வீதா பிரதாப், பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி, சிறுவன் கோவர்தன், இயக்குநர் ராம்சிவா உட்பட பலர் நடித்துள்ளனர்.
ரமேஷ் யந்த்ரா இயக்கியுள்ள இந்தப் படம் பிரேசிலில் நடைபெற்ற 48 -வது சவ் பாவ்லோ (Sao Paulo) சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. விவசாயத்தை இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி அழிக்கின்றன என்பதை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், உலக சினிமா பிரிவில் நேற்று சத்யம் திரையரங்கில் இப்படம் திரையிடப்பட்டது.