அல்லு அர்ஜுனுடன் பிரச்னையா? சித்தார்த் பல்டி பாடகர் தாக்கு

சென்னை: ‘புஷ்பா 2’ குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார். ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு கூடிய கூட்டம் குறித்து சித்தார்த்திடம் படத்தின் ரிலீசுக்கு முன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “நமது ஊரில் கட்டிட வேலைகளுக்காக ஜேசிபியை நிறுத்தினாலும்கூட கூட்டம் கூடும். எனவே பிஹாரில் கூட்டம் கூடியது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. பெரிய மைதானம் வைத்து நிகழ்ச்சி நடத்தினால் கூட்டம் கூடத்தான் செய்யும். இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும், குவாலிட்டிக்கும் சம்பந்தமில்லை” என நடிகர் சித்தார்த் தெரிவித்தார்.

இந்நிலையில் புஷ்பா 2 படம் திரைக்கு வந்து, 1000 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சித்தார்த்திடம் இது பற்றி கேட்டபோது, ‘எனக்கும் அல்லு அர்ஜுனுக்கும் எந்தவொரு பிரச்னையும் இல்லை. ‘புஷ்பா 2’ மிகப் பெரிய வெற்றி படம். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். முதல் பாகம் எங்கு பெரிய வெற்றியடைந்ததோ அங்கு பெரிய அளவில் வரவேற்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறதோ அந்தளவுக்கு திரையரங்குகளுக்கு கூட்டம் வரும் என நம்புவோம்.

சினிமா ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நம்புவோம். அனைவருமே ஒரே கப்பலில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு படம் வெளியாகி வெற்றியடைவது என்பது 100-ல் ஒன்றாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், அல்லு அர்ஜுனை விமர்சித்த சித்தார்த்தின் பேச்சுக்கு பாலிவுட் பாடகர் மிகா சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வணக்கம் சித்தார்த் பாய். உங்கள் கருத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இன்று முதல் மக்கள் உங்கள் பெயரை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ள தொடங்கியுள்ளனர். சிறிது யோசித்துப் பாருங்கள், இதுவரை நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றே எனக்கு தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: