ஆஷிகாவின் அலைச்சறுக்கு விளையாட்டு

கன்னட வரவு ஆஷிகா ரங்கநாத், தமிழில் அதர்வா முரளி ஜோடியாக ‘பட்டத்து அரசன்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி நடித்த அவர், வரும் 13ம் தேதி ரிலீசாகும் ‘மிஸ் யூ’ என்ற படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்நிலையில், முதல்முறையாக அவர் அலைச்சறுக்கு விளையாட்டு என்று சொல்லப்படும் ‘சர்ஃபிங்’ விளையாடிய போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். சென்னை கோவளம் கடற்கரையில் சர்ஃபிங் செய்த போட்டோக்களைப் பகிர்ந்துள்ள ஆஷிகா ரங்கநாத், ‘சினிமா படப்பிடிப்பில் இருந்து ஒருநாள் மட்டும் விடுமுறை கிடைத்தது. எனவே, வேடிக்கையாக ஏதாவது செய்ய விரும்பினேன்.

முதல்முறையாக ‘சர்ஃபிங்’ செய்தது வேடிக்கையாக, மகிழ்ச்சியாக, திரில்லிங்காக இருந்தது. எனது முதல் முயற்சியிலேயே இவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கவில்லை’ என்றார். கடந்த நவம்பர் 29ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட ‘மிஸ் யூ’ படம், பெஞ்சல் புயல் மற்றும் மழையின் காரணமாக தேதி மாற்றப்பட்டது. இப்போது வரும் 13ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் சித்தார்த், பாலசரவணன், கருணாகரன், மாறன் நடித்துள்ளனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

Related Stories: