ஹீரோ ஆனார் ரோபோ சங்கர்

சென்னை: ரோபோ சங்கர் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘அம்பி’ டி2 மீடியா நிறுவனம் சார்பில் எஃப். பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் பாஸர் ஜே. எல்வின். ரோபோ சங்கருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன் என ஏராளமான நட்சத்திர பட்டாளமும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

வெற்றிவேல் முருகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கன்னடத்தில் அகோரா, நெகிழா தர்மா, மகளே படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் ஏ.பி. முரளிதரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் தந்து குடும்ப சித்திரமாக இப்படம் உருவாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை கமல்ஹாசன் வெளியிட்டார்.

Related Stories: