சென்னை: மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார். மண்டேலா, மாவீரன் படங்களை இயக்கியவர் மடோன் அஸ்வின். இந்த படங்களையடுத்து, சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெறுகிறது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
இது குறித்து படக்குழு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சிறந்த நடிகர்களில் ஒருவரான விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. ஏற்கனவே மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் படத்தை தயாரித்த நிலையில் மீண்டும் அவருடன் இதில் இணைந்துள்ளோம். உலக அளவிலான சினிமா ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் இந்த படம் அமையும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.