மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரையும் விடுவித்தது நீதித்துறையையே கேலிக்குள்ளாக்கி விட்டது: சிபிஎம்

சென்னை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரையும் விடுவித்தது நீதித்துறையையே கேலிக்குள்ளாக்கி விட்டது என சிபிஎம் கருது தெரிவித்துள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கருத்து தெரிவித்தார். ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது என்ற அமித் ஷாவின் கருத்துக்கு மறுநாளே தீர்ப்பு வந்துள்ளது. சங்பரிவார் அமைப்பினர் தண்டனையின்றி துணிந்து செயல்படும் வகையில் தீர்ப்பு உள்ளது. என்.ஐ.ஏ. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

The post மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரையும் விடுவித்தது நீதித்துறையையே கேலிக்குள்ளாக்கி விட்டது: சிபிஎம் appeared first on Dinakaran.

Related Stories: