பொங்கல் தொடர் விடுமுறையால் தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

தர்மபுரி: பொங்கலையொட்டி தொடர் விடுமுறை காரணமாக தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.தமிழகத்தில் பொங்கல் விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 15ம் தேதி, 16ம் தேதி, 17ம் தேதி, 18ம்தேதி என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வந்து தர்மபுரியில் தங்கியிருந்து பணியாற்றும் வெளியூர்வாசிகள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக தர்மபுரி பஸ் நிலையத்தில் நேற்று காலை முதல் மூட்டை முடிச்சுகளுடன் பஸ்சுக்காக குவிந்தனர்.

இதனால், தர்மபுரி பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூட்டம் அலைமோதியது. தர்மபுரியில் இருந்து சென்னை, பெங்களூரு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் சேலத்தில் இருந்தும் பெங்களுரூவில் இருந்தும் சிறப்பு பஸ்கள் தர்மபுரி வழியாக இயக்கப்பட்டது. சென்னை, ஓசூர், பெங்களுருவில் பணியாற்றும் தர்மபுரியை சேர்ந்தவர்களும் தர்மபுரிக்கு வந்து சேர்ந்த வண்ணம் இருந்தனர். இதன் காரணமாக தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

 

Related Stories: