குடிநீராதாரங்களை இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் முதலமைச்சர்!

சென்னை: சென்னை முழுவதும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய ரூ.3,108.55 கோடி மதிப்பீட்டில் 98 கி.மீ நீளம் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொள்கை ஒப்புதல் வழங்கினார். எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு, 9 குடிநீராதாரங்களை சுற்றுக்குழாய் மூலம் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நீராதாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டாலும் அனைத்து நீரேற்று நிலையங்களிலிருந்தும் சமமான குடிநீர் வழங்குவதை உறுதிசெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: