தமிழ்நாட்டில் மேலும் 2 இடங்களில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு!

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 இடங்களில் மினி டைடல் பூங்கா அமைகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் நெல்லை, குமரியில் மினி டைடல் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டைடல் பூங்கா அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இது தொடர்பான வடிவமைப்பு மற்றும் திட்ட ஆலோசகர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் டைடல் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்குவிக்கப்படும் வாய்ப்புள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் ஐ.டி. நிறுவனங்கள் குவிவதைத் தவிர்த்து, சிறிய நகரங்களிலும் தொழில் தொடங்க வாய்ப்புகளை ஏற்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் டைடல் பார்க் அல்லது மினி டைடல் பார்க் அமைப்பதன் மூலம், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்தை அரசின் நோக்கமாக கொண்டு செயலாற்றி வருகிறது.

இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் கட்டி திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் சமீபத்தில் 330 கோடி ரூபாய் செலவில் 21 தளங்களுடன் கூடிய டைடல் பார்க் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது மேலும் நெல்லை, குமரி ஆகிய 2 மாவட்டங்களில் டைடல் பார்க்க அமைக்க திட்டமிட்டு, அதற்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

The post தமிழ்நாட்டில் மேலும் 2 இடங்களில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.

Related Stories: