ஆசிய கோப்பை டி20 செப்.9ம் தேதி துவக்கம்

புதுடெல்லி: ஆசிய கோப்பை டி20 போட்டிகள் வரும் செப்டம்பர் 9ம் தேதி துவங்க உள்ளன. கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை டி20 போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், இந்தாண்டில், ஆசிய கோப்பை போட்டிகளை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றது. இப்போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட உள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் மோஷின் நக்வி, எக்ஸ் சமூக தளத்தில் நேற்று உறுதி செய்துள்ளார்.

அதன்படி, ஆசிய கோப்பை டி20 போட்டிகள் வரும் செப்டம்பர் 9ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் ஆசியாவை சேர்ந்த, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளின் அணிகள், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதவுள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் களமிறங்க உள்ளன. போட்டிகள் நடக்கும் தேதி உள்ளிட்ட விரிவான விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

The post ஆசிய கோப்பை டி20 செப்.9ம் தேதி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: