வெ.இ.யுடன் 4வது டி20 ஆஸி கலக்கல் வெற்றி

பாஸெடெரே: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபாரமாக ஆடி 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 3 போட்டிகளிலும் ஆஸி அணி சிறப்பாக செயல்பட்டு ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்தது.

இந்நிலையில், பாஸெடெரே நகரில் 4வது டி20 போட்டி நடந்தது. இப்போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தபோதும், கணிசமாக ரன்களை குவித்தனர். 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன் குவித்தது.

பின், கடின இலக்குடன் ஆடிய ஆஸியின் துவக்க வீரரான கேப்டன் மிட்செல் மார்ஷ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இருப்பினும், மற்றொரு துவக்க வீரர் கிளென் மேக்ஸ்வெல் 18 பந்தில் 47 ரன் குவித்தார். மேலும், ஜோஷ் இங்கிலீஸ் 51, கேமரூன் கிரீன் 55 ரன் குவித்து ரன் உயர உதவினர். 19.2 ஓவரில் ஆஸி, 7 விக்கெட் இழந்து 206 எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிளென் மேக்ஸ்வெல் ஆட்ட நாயகன்.

The post வெ.இ.யுடன் 4வது டி20 ஆஸி கலக்கல் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: