டெஸ்ட் தொடரில் 700 ரன் கடந்த கில்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில், 2வது இன்னிங்சின்போது, இந்திய கேப்டன் சுப்மன் கில் அபாரமாக ஆடி 238 பந்துகளில் 103 ரன் விளாசினார். இதன் மூலம், 4 டெஸ்ட்களில் அவர் குவித்த ரன்களின் எண்ணிக்கை 722 ஆனது. அதனால், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்தார். இப்பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2024ம் ஆண்டு, 5 டெஸ்ட், 712 ரன்), 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

விராட் கோஹ்லி (2016, 5 டெஸ்ட், 655 ரன்) 3ம் இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த அணிகளை வைத்து பார்க்கையில், ஒரு தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரராக சுனில் கவாஸ்கர் 774 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர், 1971ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் ஆடி இந்த ஸ்கோரை எடுத்துள்ளார். இந்திய அணி கேப்டனாக டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்தோர் பட்டியலில் சுப்மன் கில் 2ம் இடத்தை பிடித்துள்ளார்.

The post டெஸ்ட் தொடரில் 700 ரன் கடந்த கில் appeared first on Dinakaran.

Related Stories: