துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய அன்னா, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை லெய்லா அன்னி ஃபெர்னான்டஸ் (22), ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தானுக்காக ஆடி வரும் எலெனா ரைபாகினா (26) மோதினர். இரு வீராங்கனைகளும் சம பலத்துடன் மோதியதால் போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக காணப்பட்டது.
முதல் செட்டை 7-6 (7-2) என்ற புள்ளிக் கணக்கில் டைபிரேக்கரில் ரைபாகினா கைப்பற்றினார். சுதாரித்து ஆடிய லெய்லா, 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் டைபிரேக்கரில் 2வது செட்டை வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 3வது செட்டும் டைபிரேக்கர் வரை சென்றது. அந்த செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றிய லெய்லா போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து, இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் லெய்லா – அன்னா காலின்ஸ்கயா மோதவுள்ளனர்.
The post வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் ஒயிலாய் வென்ற லெய்லா: பைனலில் இன்று அன்னாவுடன் மோதல் appeared first on Dinakaran.
