பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்மை அமர்வு நீதிபதி பொறுப்பேற்பு

 

பெரம்பலூர், ஜூன 14: பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பதவி வகித்து வந்த பல்கீஸ் என்பவர், மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணி புரிந்து வந்த பத்மநாபன் என்பவர், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவினை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சில தினங்களுக்கு முன்பு பிறப்பித்தார்.இதனையடுத்து நேற்று முன் தினம்(12ம்தேதி) பத்ம நாபன் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் பொறுப் பேற்றுக் கொண்டார்.பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பத்மநாபனுக்கு, பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி, பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி,

பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, பெரம்பலூர் மாவட்ட சார்பு நீதிபதிகள், வேப்பந் தட்டை மற்றும் குன்னம் பகுதிகளில் இயங்கி வரும் நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், அரசு சிறப்பு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள், நீதிமன்ற மேலாளர்கள், அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்துவந்த தனசேகரன் என்பவர் மே.31 அன்று பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்த பெர ம்பலூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதிக்கான பதவி இடம் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்மை அமர்வு நீதிபதி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: