இந்த குடியிருப்பில் ஏறத்தாழ 96 பணியாளர்கள் குடும்பத்துடன் குடியிருக்கக்கூடிய வகையில் 430 சதுர அடியில் ஒவ்வொரு வீடும் அமைகிறது. இப்பணிகள் விரைவில் முடிவடைய இருக்கிறது. பணிகள் முடிந்தவுடன் பணியாளர்கள் குடியேறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பை திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அவரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்பி கலாநிதி வீரசாமி, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் ஷோபனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் பொது பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post தண்டையார்பேட்டையில் அரசு அச்சக பணியாளர்களுக்காக ரூ.40 கோடியில் புதிய குடியிருப்புகள் விரைவில் முதல்வர் திறந்து வைப்பார்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.