சிவகங்கை, ஜூன் 14: இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு உரச்செலவும் குறையும் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: இலை, மரக்கிளைகள் மற்றும் பண்ணை கழிவுகளை பரப்பி அதன் மீது சாண கரைசலை தெளிக்க வேண்டும். 45 நாட்கள் இடைவெளியில் இவற்றை சாணக்கரைசல் தெளித்து கலக்க வேண்டும். 90 நாட்களுக்குள் இந்த கலவை நன்கு மக்கிய இயற்கை உரமாக மாறிவிடும். இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு உரச்செலவும் குறையும் என தெரிவித்துள்ளனர்.
The post இயற்கை உரம் பயன்படுத்துங்க appeared first on Dinakaran.