ஏழை ஜோடிக்கு 4 கிராம் தங்கம், சீர்வரிசையுடன் இலவச திருமணம் ஒ.ஜோதி எம்எல்ஏ நடத்தி வைத்தார் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்

செய்யாறு, டிச.16: செய்யாறு அருகே சேராம்பட்டு கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை ஜோடிக்கு எம்எல்ஏ ஒ.ஜோதி நேற்று இலவச திருமணம் நடத்தி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் சேராம்பட்டு அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் 2024-2026 சட்டமன்ற அறிவிப்பின்படி, எம்எல்ஏ ஒ.ஜோதி பரிந்துரையின்பேரில் திருவண்ணாமலை மாவட்டம் சேராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சிவா மற்றும் காஞ்சிபுரம் அடுத்த சிறுபிளாபூர், திருவந்தார் பகுதியைச் சேர்ந்த ரவி மகள் ரோஜா ஆகியோருக்குமான திருமணம் நேற்று இந்து சமய அறநிலையத் துறை மூலம் நேற்று நடந்தது. இதில் 4 கிராம் தங்க தாலியுடன் கட்டில் மெத்தை, சமையல் பாத்திரங்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்ட ரூ.70 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மணமக்களை செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி வாழ்த்தி நினைவு பரிசினை வழங்கினார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் (கூடுதல் பொறுப்பு) மணிகண்டபிரபு, உதவியாளர் கார்த்திகேயன், செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.ஞானவேல், திமுக பிரமுகர்கள் ஆறுமுகம், கருணாநிதி, ஊர் பிரமுகர்கள் மற்றும் திருமண தம்பதிகளின் உறவினர்கள் பலரும் பங்கேற்றனர்.

Related Stories: