நெல்லை, ஜூன் 14: களக்காடு கோவிலம்மாள்புரம் பகுதியை சேர்ந்த விவசாயி ஆனந்த். இவருக்கு மனைவி மாதுரி, மகள் ரித்திகா (11) ஆகியோர் உள்ளனர். ரித்திகா பாளை அருகேயுள்ள ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு மகளிர் பள்ளி விடுதியில் தங்கியிருந்து அங்கு 5ம் வகுப்பு படித்து வந்தார். மாதுரியின் தந்தை மும்பையில் உள்ளார். இதனால் பள்ளி விடுமுறையில் அவர்கள் மும்பைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து அவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரயிலில் நெல்லை வந்தனர். ரயில் வள்ளியூர் ரயில் நிலையத்திற்கு வந்த போது, மாதுரி மற்றும் ரித்திகா வாசல் படி அருகே வந்தனர். ரயில் நின்றதாக நினைத்த மாணவி ரித்திகா ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்க முற்பட்டு தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுமியை மீட்டு உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் ரித்திகா உயிர் இழந்தார்.
The post ஓடும் ரயிலில் தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு appeared first on Dinakaran.