அதனையடுத்து 189 ரன் எடுத்தால் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆடத் தொடங்கினர். இங்கிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. அந்த அணியில் அதிகட்சமாக எவின் லிவீஸ் 39, ரோஸ்டன் சேஸ் 24 ரன் சேர்த்தனர். வெஸ்ட் இ்ண்டீஸ் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் 21 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் லியம் டவ்சன் 4, மேத்யூ பாட்ஸ், ஜேகப் பெத்தேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை லியம் டவ்சன் பெற்றார்.
The post வெஸ்ட் இண்டீசுடன் டி20 போட்டி பட்டாசாய் வெடித்த பட்லர் இங்கிலாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.