மதுரை: கொரோனா தொற்று பரவலால் மதுரை விமான நிலையம் வரும் பயணிகளிடம் கண்காணிப்பு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயணிகளிடம் 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பு பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. காய்ச்சல், இருமல் பாதிப்பு இருக்கும் பயணிகளுக்கு ஸ்கேனர் கண்காணிப்பு கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை பொறுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.