திருப்போரூர்: அன்புமணியின் நடைப் பயணத்தை ஒட்டி ராமதாஸ் பெயர் இல்லாமல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. திருப்போரூரில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களிலும் “ராமதாஸ்” என்கிற பெயர் இடம் பெறவில்லை. தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணத்தை அன்புமணி திருப்போரூரில் இன்று மாலை தொடங்குகிறார்.
ராமதாஸ் பெயர் இடம்பெறாமல் படம் மட்டும் உள்ளது
ராமதாஸ், அன்புமணி, சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்று உள்ளது. பேனர்களில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரின் படங்கள் இடம் பெறவில்லை. தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை ஒட்டி பேனர்கள், பாமக கொடிகள் வைக்கப்பட்டுள்ளன. கட்சியின் கொடியை பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் நேற்று கூறியிருந்த நிலையில் கட்சி கொடிகள் நடப்பட்டுள்ளன. அன்புமணியின் நடைப் பயணத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என டிஜிபியிடம் ராமதாஸ் புகார் அளித்திருந்தார்.
The post அன்புமணியின் நடைப் பயணத்தை ஒட்டி ராமதாஸ் பெயர் இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்..!! appeared first on Dinakaran.
