நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்ற நெல்லை மாணவர் சூர்யநாராயணன் தரவரிசையில் முதலிடம்

சென்னை: நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்ற நெல்லை மாணவர் சூர்யநாராயணன் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். தரவரிசை பட்டியலில் 655 மதிப்பெண் பெற்ற சேலத்தைச் சேர்ந்த மாணவர் அபினீத் நாகராஜ் 2-ம் இடம்; 653 மதிப்பெண் பெற்ற சேலத்தைச் சேர்ந்த ஹிருதிக் விஜயராஜா 3ம் இடம் பிடித்துள்ளார். திருவள்ளூர் மாணவர் ராகேஷ் 4வது இடம், செங்கல்பட்டு மாணவர் பிரஜன் ஸ்ரீவாரி 5வது இடம்; விருதுநகர் மாணவர் நிதின் பாபு 6வது இடம், சென்னை மாணவர் கைலேஷ் கிரண் 7-வது இடம் பிடித்துள்ளார். சென்னை மாணவர் நிதின் கார்த்திக் 8வது இடம், தருமபுரி மாணவர் பிரகதீஷ் சந்திரசேகர் 9-வது இடம் பிடித்துள்ளார். தரவரிசைப் பட்டியலில் தேனியைச் சேர்ந்த மாணவி பொன் ஷரினி 10வது இடம் பிடித்துள்ளார்.

The post நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்ற நெல்லை மாணவர் சூர்யநாராயணன் தரவரிசையில் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: